business

img

6 மாநிலங்களில் 100 ரூபாயைத் தாண்டியது... பெட்ரோல் விலை... ம.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிரா வரிசையில் ஆந்திரா, தெலுங்கானாவும் இடம்பெற்றன...

விஜயவாடா:
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் வரிசையில், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் முதன்முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள் ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை பெட்ரோல் - டீசல் விலைகளை உயராமல் பார்த்துக் கொண்டமோடி அரசு, கடந்த மே 2-ஆம்தேதிக்குப் பிந்தைய 28 நாட்களுக்குள்19 முறை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தியது. இதனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமன்றி, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டது. நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ சிட்டி ஒன்றிலும் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், ஞாயிறன்று (ஜூன் 6) பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 முதல் 28 காசுகள் வரையும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் வரையும் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து,ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள்மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 08 காசுகளுக்கும், ஜெய்ப்பூரில் 101 ரூபாய்59 காசுகளுக்கும், ம.பி. மாநிலம் ரெவா மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய் 38 காசுகளுக்கும், போபாலில் 103 ரூபாய் 17 காசுகளுக் கும் விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவின் அடிலாபாத்தில் 100 ரூபாய் 57 காசுகளாகவும், நிஜாமாபாத்தில் 100 ரூபாய் 17 காசுகளாகவும் பெட்ரோல் விலை உயர்ந்துள் ளது.சென்னையில் பெட்ரோல் விலைலிட்டர் 96 ரூபாய் 47 காசுகளாகவும், டீசல் விலை 90 ரூபாய் 66 காசுகளாகவும் உள்ளது.

;